டிசம்பர் 27, சென்னை (Chennai): வயல் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டாக்டர்.கே.வீர பாபு இயக்கத்தில், சிர்பி இசையில், அருள் செல்வன் ஒளிப்பதிவில், நடிகர்கள் வீரபாபு, மஹானா, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துக்காளை, வைஷ்ணவி, பேபி ஷாலினி ரமேஷ், தயாளன், ரமேஷ், இந்திரஜித் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் முடக்கறுத்தான் (Mudakkaruthaan). இப்படத்தின் டிரைலர் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு விழா சென்னையில் வைத்து நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
கலையை கொலையாக மாறியுள்ளதாக வேதனை: இந்நிலையில், இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான் (Thankar Bachan) பேசுகையில், "திரைப்படைகளை கண்டுபிடிக்கப்பட்டது மக்களை மேம்படுத்தவும், முன்னேற்றவும் கண்டறியப்பட்டது. ஆனால், இன்று அக்கலை அப்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. இதனை கலையாக பார்த்தவர்கள், கலையாக பார்த்தார்கள். வியாபாரமாக பார்த்தவர்கள் வியாபாரம் செய்தார்கள். கலையாக படத்தை எடுப்பவர்களுக்கு வேலை இல்லை. Modi Govt Advisory On Fraudulent Loan Apps: கடன் மோசடி தொடர்பான செயலிகள் விளம்பரங்களுக்கு ஆப்பு; மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு அறிவுறுத்தல்.!
பார்க்ககூடாததை பார்க்க விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்கள்: இன்றளவில் சிறந்த, நல்ல படங்கள் என்று கூறினாலே, ஒரு மாதிரி பார்க்கிறார்கள். படம் பார்க்க கூடாது என்பதை தேடிப்பிடித்து பார்க்கும் முதல் நபர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். எந்த நாம் பார்க்க கூடாதோ, மனதை சிதைக்குமோ, பின்னடைவாக இறுக்குக்கோ, குழந்தைகளுக்கு காண்பிக்க கூடாதே அதனை தேடி பார்த்து வருகிறார்கள். இதனை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் திரைத்துறையும், ஊடகமும் இருக்கிறது. இவை பெரிய சிக்கலுக்கான செயல். நான்கைந்து நிறுவனத்திற்காக, நடிகர்களுக்காக தமிழ் சினிமா துறை செயல்படுகிறது. முடக்கறுத்தான் திரைப்படம் மண்ணிற்கு, மக்களுக்கான திரைப்படம்.
அனைவரும் கொலைகாரர்களே: கொலையை பார்த்து ரசிக்கும் அளவுக்கு மக்களின் எண்ணத்தை கொண்டு வந்துவிட்டனர். யார் 50 கொலை செய்கிறாரோ, அவருக்கு அதிக சம்பளம். படித்தில் நடிப்பவர், இயக்குனருக்கும் ஒரே சம்பளம். கொலைகாரர்கள் என்றால் கத்தி வைத்து கொலை செய்பவன் மட்டும் கொலைகாரன் அல்ல.
வாளை வைத்து மயிர் வழிப்பதாக வேதனை: அந்த காட்சியில் நடிப்பவரும், இயக்குபவரும், அதனை பார்ப்பவர்கள் கொலைகாரர்கள் ஆவார்கள். சினிமா என்பது கலை. சினிமா ஒருவனை மாற்றிவிடும், வாழ்க்கையை புரட்டிபோட்டுவிடும். இந்த கலையை வைத்து நாம் என்ன செய்கிறோம்?. வாளை கையில் வைத்துக்கொண்டு, தாடியை வழித்துக்கொண்டு இருக்கிறோம். திரைக்கலை வாள் போன்றது" என மேடையில் பேசினார்.
தங்கர்பச்சான் பற்றி: தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம்வந்த தங்கர் பச்சான் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள், கருமேகங்கள் கலைகின்றன ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இவரின் பள்ளிக்கூடம் திரைப்படம் 80, 90-களில் பலமுறை விரும்பி பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகவும் பலருக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முடக்கறுத்தான் படத்தின் டிரைலர் காட்சி: