செப்டம்பர் 09, டெல்லி (Cinema News): தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி தவறாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது விளம்பரம் மற்றும் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க, பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் (Actress Aishwarya Rai Bachchan) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, அவரது அடையாளம் லாபத்திற்காகவும், தவறான விளம்பரத்திற்காகவும் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு சில சமூக வலைத்தளங்களை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஐஸ்வர்யா நேஷன் வெல்த் என்ற நிறுவனத்தையும் அவர் குறிப்பிட்டார். இதற்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தினார். Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் மரணம்? ஷாக் தந்த செய்தி.. பதில் சொன்ன காஜல்.!
ஐஸ்வர்யா ராய் வழக்கு:
நடிகை ஐஸ்வர்யா ராயின் போட்டோ ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட்டு, ஆபாசமான, மார்பிங் செய்யப்பட்ட காட்சிகள் ஆன்லைனில் பரப்பப்பட்டதாகவும், இது அவரது கண்ணியம் மற்றும் உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேஜாஸ் காரியா, தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தடை உத்தரவுகளை வழங்க விருப்பம் தெரிவித்தார். இதன் வழக்கு விசாரணை, அடுத்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.