Rashmika's Girl Friend Movie: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தீக்ஷித் ஷெட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாய்பிரண்ட் படத்தின் படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Rashmika Mandanna (Photo Credit: YouTube / Facebook)

டிசம்பர் 23, சென்னை (Cinema News): தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). கடந்த 2017ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான மந்தனா, 2018ல் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்திற்கு பின்னர் பெருவாரியாக அறியப்பட்டார்.

தமிழில் 2 படங்கள்: சுல்தான் திரைப்படத்தில் வாயிலாக தமிழிலும் அவர் அறிமுகமானவர், வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் நடித்து இருந்தார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே ராஷ்மிகா நடித்திருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்கள் நல்ல அடையாளத்தை பெற்று தந்தன.

கவர்ச்சியை இறக்கிவிட்ட மந்தனா: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படத்திலும் மந்தனா நடித்து அசத்தி இருந்தார். இந்த படத்தில் அவர் கவர்ச்சி காட்சிகளிலும் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். California Narayan Temple Pro Khalistani Slogans: கலிபோர்னியாவில் உள்ள நாராயணன் கோவிலில் காலிஸ்தான் வசனம்: அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக பிரிவினைவாதிகள் அதிர்ச்சி செயல்.! 

அடுத்த படத்தின் அப்டேட்: இந்நிலையில், நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பாய்பிரண்ட் படத்தின் அறிமுக வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அல்லு அரவிந்த் தயாரித்து வழங்கும் இப்படத்திற்கு, ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாள் பரிசாக அறிமுக வீடியோ: இயக்குனராக ராகுல் ரவீந்திரன், ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். படத்தில் வரும் பெண் குரல் பாடல்களை சின்மயி ஸ்ரீபடா பாடி இருக்கிறார். தீக்ஷித் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிமுக வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement