Aquaman and the Lost Kingdom: அட்டகாசமான கடல் பயணத்திற்கு தயாரா? ரசிகப்பெருமக்களே.. அக்வாமேன் லாஸ்ட் கிங்டம் படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.. டிசம்பரில் திரை விருந்து.!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் 2 நிமிட அளவிலான டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

Aquaman and the Lost Kingdom (Photo Credit: YouTube)

நவம்பர் 21, சென்னை (Cinema News): கடந்த 2018ம் ஆண்டு வெளியான அக்வாமேன் (Aquaman) திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து, அப்படத்தின் அடுத்த பாகமான அக்வாமேன் தி லாஸ்ட் கிங்கிடம் (Aquaman and the Lost Kingdom) திரைப்படம் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வான் (James Wan) இயக்கத்தில், டேவிட் லெஸ்லி ஜான்சன் வசனத்தில், ரூபர்ட் கிரெக்சன்-வில்லியம்ஸ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

டிசி ஸ்டுடியோஸ், அட்டாமிக் மான்ஸ்டர், தி சஃப்ரான் கம்பெனி தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தை, வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ் (Warner Bros. Pictures) தயாரிப்பு நிறுவனம் உலகளவில் வெளியிடுகிறது. அமெரிக்க மதிப்பில் 205 மில்லியன் டாலர் தொகை செலவில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. Canara Bank Fire: வங்கியில் திடீரென பற்றிய தீ.. மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பிய பணியாளர்கள்..! 

உலகளவில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து படம் வெளியிடப்படும் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி இப்படம் திரையரங்குகளில் உலகளவில் வெளியாகிறது. இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்பு படம் வெளியிடப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 நிமிட அளவிலான டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய டிரைலர் ஒன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. ஜேசன் மோமோவா (Jason Momoa), பேட்ரிக் வில்சன், ஆம்பர் ஹார்ட், யாஹ்யா அப்துல்-மதின் II, நிக்கோல் கிட்மேன் உட்பட பலரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement