நவம்பர் 21, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கட்டிடத்தில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பணியாளர்கள் வங்கியின் கதவை அடைத்துவிட்டு, தங்களின் அலுவலக பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வங்கியின் நுழைவு வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் பதறிப்போன நிலையில், அவர்களில் சிலர் தங்களின் பைகளை கீழே போட்டு, ஜன்னல் வழியே குதித்து உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு & மீட்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. UP Shocker: வரதட்சணை கொடுமையால் துயரம்: 21 வயது பெண் காவலர் மர்ம மரணம்..! கண்ணீரில் உறவினர்கள்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)