Bigg Boss Tamil Season 8: ஆண்கள் Vs பெண்கள்.. வீட்டை விசு படம் போல பிரித்த பிக் பாஸ்; அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. இன்றைய ப்ரோமோ உள்ளே.!
முன்னதாகவே நாமினேஷன் விவகாரத்தில் அட்வான்டேஜ் டாஸ்க்கை பெற்றுத் தேர்ந்த ஆண்கள் அணி, தனது எதிர்பாராத பிரதிபலனை அடைந்துள்ளது.
அக்டோபர் 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.
சாச்சனா வெளியேற்றம்:
முதல் நாளே 24 மணிநேரத்திற்குள் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்படுவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் மஹாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனாவை நாமினேட் செய்தனர். இதனால் அவர் தனது வெற்றிக்கோப்பையை வீட்டிற்குள் இருந்து உடைத்து பின் வெளியேறினார். அவருக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மறுநாள் போட்டிக்குள் போட்டியாளர்கள் நுழைக்கப்ட்டனர். Maharaja: மகாராஜா படத்தின் வெற்றி விழா.. இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி..!
போராடி வாங்கிய பெண்கள் அணியின் பரிதாபம்:
அதன்படி, முதல் நாளே வீடு ஆண்களுக்கு - பெண்களுக்கு என தனியாக பிரித்துக்கொள்ளப்பட்ட நிலையில், பெண்கள் தாங்கள் அலங்காரம் செய்து தயாராகவும், வசதியாகவும் உறங்க வாய்ப்புள்ள அறைய தேர்வு செய்துகொண்டனர். அதனை பயன்படுத்தி ஒரேயொரு முறை நாமினேஷன் ஆண்களை செய்யக்கூடாது என்ற ஒப்பந்தமும் ஆண்களுடன் அவர்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்கள் - பெண்கள் அறையில் உள்ள பிற அறைகள் நுழைவு வாயில்களை அவர்கள் பயன்படுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உப்புக்காக போராட்டம்:
இதனால் ஆண்கள் அறை ஒதுக்கப்பட்ட இடத்தில் மளிகைப்பொருட்கள் வைக்கப்படும் நிலையில், அங்கு சென்று வர ஆண்கள் தங்களின் அடுத்த கோரிக்கையை நிர்பந்திக்கின்றனர். அதாவது பெண்கள் வசம் இருக்கும் உப்பை ஆண்கள் கேட்டபோது, அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் நாங்கள் பட்டினியாக இருக்கவும் தயார் என பெண்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இந்த போட்டி 100 நாட்களிலும் ஆண்கள் Vs பெண்கள் என்ற நிலை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், வரும் நாட்களில் போட்டியின் பரபரப்பு மேலும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் நாளின் முதல் ப்ரோமோ: ஆண்கள் Vs பெண்கள்
இரண்டாவது ப்ரோமோ: போட்டியாளர்களுக்கு இடையே விவாதம்
மூன்றாவது ப்ரோமோ: உப்புக்காக சண்டைபோட்டு, உண்ணாவிரதம் இருக்க தயாராகும் பெண்கள் அணி