Bigg Boss Tamil Season 8: "நீதான் என்னோட ஹீரோ" - அருணிடம் அன்பை பொழிந்த அர்ச்சனா ரவி.. வைரல் ப்ரோமோ இதோ.!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அருண், தனது வழிகளில் செயல்பட வேண்டும் என அர்ச்சனா ரவிச்சந்திரன் அன்பு கோரிக்கை முன்வைத்து இருக்கிறார்.

Arun & Archana Ravichanrdran | Bigg Boss Tamil Season 8 | Day 82 Promo (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 27, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா (Soundarya), விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர். இந்த வார நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ராணவ், விஜே விஷால், ஜெப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும், தங்களின் குடும்பத்தவரை சந்தித்து வருகின்றனர். இதனால் போட்டி விறுவிறுப்பு பெற்றுள்ளது. Bigg Boss Tamil Season 8: காதலருக்கு பிக் பாஸ் வீட்டிலேயே ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா; உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. யார் அந்த அதிஷ்டசாலி?

அர்ச்சனா ரவியின் ஹார்லிக்ஸ் அருண்:

இந்நிலையில், சீரியல் நடிகை, பிக் பாஸ் தமிழ் சீசன் 7 (Bigg Boss Season Tamil 7) வது சீசன் வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் (Archana Ravichandran) பிக் பாஸ் தமிழ் வீட்டுக்குள் இன்று வருகை தருகிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அர்ச்சனா ரவி நேரடியாக போட்டியாளர் அருணுக்கு ஆதரவாக பல வீடியோ, ட்விட் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் தனது ஆதரவை தெரிவித்து இருந்தனர். இருவரும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர்களின் காதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனா, அருணுக்கு தனது ஆதரவை தெரிவித்து சில ஆலோசனையும் வழங்கி இருந்தார். இந்த விஷயம் தொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அருண் - அவரின் தோழி அர்ச்சனா (Arun Archana Ravichandran) சந்தித்துக்கொண்ட காணொளி: