Bigg Boss Tamil Season 8: "அப்பறம் என்னப்பா ஆரம்பிக்கலாமா?" - தெறிக்கவிடும் பிக் பாஸ் ப்ரோமோ காட்சிகள் உள்ளே.!
நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி-யில் அடுத்தடுத்து பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.
அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil), தற்போது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழிலும் நல்ல வரவேற்பை சந்தித்தது. திரைத்துறை, சமூக ஆர்வலர்கள், யூடியூப் பிரபலங்கள் என மக்களின் அங்கீகாரம் வேண்டுவோர், இழந்த அங்கீகாரத்தை திரும்ப பெற நினைப்போரை தேர்வு செய்து போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8:
20 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் போட்டியில், மொத்தமாக 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்படும் பணிகளை செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் போட்டியாளர் இறுதியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். அவர்க்கு ரூ.50 இலட்சம் ரொக்கம், வீடு அல்லது கார் போன்ற பரிசுகள் வழங்கப்படும். கடந்த 2023 பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா ரவிச்சந்திரன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். 06 அக். 2024 இன்று, மிகப்பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) கோலாகலமாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி (Vijay Television) வாயிலாகவும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) வாயிலாகவும் நேரலையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி.. க்ராண்ட் லான்ச் வீடியோ உள்ளே.!
தொகுப்பாளராக விஜய் சேதுபதி:
தொடக்க விழா நாளான இன்று நிகழ்ச்சி மாலை 6 மணிமுதல் இந்திய நேரப்படி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திங்கட்கிழமையான நாளை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 09:30 மணிக்கு மேல் தினம் ஒருமணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளராக கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி இருந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்குகிறார். வீட்டிற்குள் எந்தந்த போட்டியாளர்கள் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. வாரத்தின் 5 நாட்கள் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விஜய் சேதுபதியுடன் உரையாற்றுவார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு தயாராக இருங்கள்:
கடந்த சீசன்களில் கமல் அவ்வப்போது வெகுண்டெழும் காட்சிகளும் இடம்பெற்று இருந்த நிலையில், விஜய் சேதுபதி என்ன செய்யப்போகிறார்? என்பதை காண ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும், அதனை கலாய்க்கும் நெட்டிசன் படையும் முழுவீச்சில் தயார் நிலையில் இருக்கிறது. இதனிடையே, இன்று காலை முதல் விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள பிக் பாஸ் ப்ரோமோ வைரலாகி வருகிறது. மாலை 6 மணிக்கு உங்கள் வீடுகளில் காணாத்தவறாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீசன் 7-ல் தொடக்க நிகழ்வு டிவிபி ரேட்டிங்கில் 9.9 புள்ளிகளும், இறுதிப்போட்டி அன்று 8.67 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
புது வீடும் ரெடி, புது ஆளும் ரெடி.. இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் உங்கள் பிக்பாஸ்:
புதிய கோணத்தில், புதிய வியூகத்துடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ப்ரோமோ: