‘Venom: The Last Dance’ Trailer: வெனம்மின் கடைசி சகாப்தம்.. 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Venom The Last Dance (Photo Credit: YouTube)

ஜூன் 10, கலிபோர்னியா (Cinema News): டிஸ்னிக்கு சொந்தமானது மார்வெல் ஸ்டூடியோஸ் ஆகும். மார்வெல் ஸ்டூடியோஸின் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் போன்ற மார்வெல் ஸ்டூடியோஸின் கதாபாத்திரங்கள் ஆக்‌ஷன் அட்வென்ச்சரில் எப்போதும் குறை வைத்தது இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாகவே மொக்கையான படங்களின் மட்டுமே மார்வல் கொடுத்து வருகிறது. இதனால் மார்வல் எப்போது கம்பேக் கொடுக்கும் என்று அனைவரும் காத்திருந்தனர். First File Signed By PM Modi: ஆண்டுதோறும் 6000 ரூபாய்.. பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து..!

'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர்: இந்நிலையில் வெனம் மூன்றாம் பாகமான படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஸ்பைடர் மேன் காமிக்ஸ்களின் மிக பிரபலமான வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘வெனம்’ கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வெனம்’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ’வெனம் 2’ கடந்த 2021ல் வெளியானது. இந்த நிலையில் இப்படவரிசையின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ உருவாகியுள்ளது. டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ (Venom: The Last Dance) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் வெனம் கதாபாத்திரம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement