செப்டம்பர் 04, சென்னை (Cinema News): மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன், கேபிஒய் பாலா படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேய் ரசிகர்களுக்கு பிடித்த கான்ஜுரிங் படத்தின் இறுதி பாகமும் வெளியாகிறது. இதன் விபரங்கள் பின்வருமாறு இணைக்கப்படுகிறது.
பேட் கேர்ள் :
வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில், விசாரணை, வடசென்னை படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் கேர்ள் (Bad Girl). இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் பல எதிர்ப்பை சந்தித்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 05-ஆம் தேதியான நாளை படம் திரையரங்கில் வெளியாகிறது.
காந்தி கண்ணாடி :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கேபிஒய் பாலா தற்போது நாயகனாக திரையில் அறிமுகமாகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காந்தி கண்ணாடி (Gaandhi Kannadi) என்ற படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷெரிப் இயக்கத்தில் நமீதா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள இப்படம் கேபிஒய் பாலாவுக்காக எதிர்பார்க்கப்படுகிறது. What happened to The Rock: ஹாலிவுட் நடிகர் Rock-க்கு என்ன ஆச்சு?.. உடல் மெலிந்து வெளியான வீடியோவால் அதிர்ச்சி.!
தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் :
கடந்த காலங்களில் பல்வேறு பாகங்களாக வெளியான கான்ஜுரிங் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கான்ஜுரிங் படத்தின் இறுதி பாகம் (The Conjuring: Last Rites) படமாக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாவ்ஸ் இயக்கத்தில் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 05-ஆம் தேதியான நாளை வெளியாகிறது. இதுவரை பல்வேறு மிரட்டலுடன் வெளிவந்த இப்படம் மீண்டும் தனக்கென தனி அடையாளத்தை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மதராஸி :
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ஶ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மதராஸி (Madharaasi). இப்படம் ரூ. 200 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன் உட்பட பலரும் நடித்துள்ள அதிரடி - ஆக்சன் நிறைந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.