ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து டெல்லி ராஷ்டிரபதி பவனில் (Delhi Rashtrapati Bhavan) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் கையெழுத்து: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, பிரதமர் மோடி பேசியதாவது, “எங்களுடைய அரசாங்கம் கிசான் கல்யாணுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். எனவே தான் பொறுப்பேற்றவுடன் முதலில் விவசாயிகள் நலனுக்காக கையெழுத்திட்டுள்ளோம். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்" என்றார். 2024 Kawasaki Ninja ZX-6R: "நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ.." இந்தியாவில் 2025 கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் அறிமுகம்..!
கிசான் யோஜனா: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 6000 வரை நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி உதவியானது பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், PM-Kisan திட்டத்தின் 17-வது தவணைக்கு (17th instalment of PM Kisan Nidhi) பிரதமர் மோடி கையெழுத்திட்டார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் கடந்த பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம் மொத்தமாக ஆறாயிரம் ருபாய் வழங்கி வருகிறது.
After signing the file, PM Modi said “Ours is a Government fully committed to Kisan Kalyan. It is therefore fitting that the first file signed on taking charge is related to farmer welfare. We want to keep working even more for the farmers and the agriculture sector in the times… https://t.co/JHdSPkmcvL
— ANI (@ANI) June 10, 2024