SJ Suryah Opens Up: திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?.!

தற்போது திருமணம் செய்துக் கொள்ளாத காரணம் குறித்து எஸ்ஜே சூர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

SJ Suryah (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 28, சென்னை (Chennai): விஜய் மற்றும் அஜித் என டாப் ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த, இயக்குனர் எஸ் ஜே சூர்யா (SJ Suryah) அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து, அவரே ஹீரோவாகி நடிக்க ஆரம்பித்தார். இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடும் அளவுக்கு நடிப்பு அரக்கனாய் மாறிவிட்டார். அட இவர் எப்படித்தான் நடிக்கிறார் என கூட நடிப்பவர்களில் இருந்து, ரசிகர்கள் வரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Alphonse Puthren Insta Post: விஜயகாந்தை கொலை செய்துள்ளனர்.. அடுத்த கொலை உதயநிதி தான்... சூட்டை கிளப்பிய பிரபலம்..!

திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா: எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அவரது காதல் தோல்வி குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அவர் அந்த பேட்டியில், தனது காதல் கதையும், தான் இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் காதல் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "அதனால்தான் அந்த கதையை படமாக எடுத்தேன். தனது காதல் தோல்வி குறித்து அறிய வேண்டுமானால் அந்த படத்தை பார்க்கலாம். நான் ஒரு நாள், டின்னருக்காக எனது காதலியுடன் ஏற்பாடு செய்திருந்தேன். அப்போது ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனால் எனது காதலியிடம் அவசர வேலை என தெரிவித்து விட்டு கிளம்பி விட்டேன். வேலையை முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் எனது காதலியின் வீட்டுக்கதவை தட்டினேன். அப்போது அவர் ‘இது ஒன்றும் சத்திரம் இல்லை’ என்று கூறிவிட்டு கதவை மூடிவிட்டார். அந்த சம்பவத்தின் போது மூடிய தனது இதயம், இப்போது வரை மூடப்பட்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement