Actor Ranjith Open Talk: "இந்த படம் பெரிய வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி" கவுண்டம்பாளையம் இயக்குனர் ரஞ்சித் அதிரடி..!

ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் `கவுண்டம்பாளையம்’. பழனிச்சாமி, தன் மகள் காதலில் விழுந்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

Kavundampalayam (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 09, சென்னை (Cinema News): நடிகர் ரஞ்சித், கவுண்டம்பாளையம் (KavundamPaalayam) என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். நாடக காதலுக்கு எதிரான படமாகவே இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக நடிகரும் இயக்குநருமான ரஞ்சித் கூறியுள்ளார். ஆனால் படத்தின் மேக்கிங்கை பார்த்தால் ரொம்பவே மோசமாக உள்ளது, இந்த படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிட்டால் மக்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வந்த நிலையில், இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. Vijay's 'GOAT' To Have An IMAX Release: ஐமேக்ஸில் பிரம்மாண்டமாக வெளிவரும் தளபதியின் கோட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில் படத்தின் முதல் காட்சி முடிந்த பிறகு நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "நா ஒன்னும் சூப்பர் ஸ்டார் கிடையாது. நான் ஒரு ஏழை கலைஞன். எளியோர் கலைஞன். இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த படம் பிடித்திருக்கிறது. அது போதும். இந்தப் படத்தை வெற்றி படமா ஆக்கிய மக்களுக்கு நன்றி. தகப்பனின் வலிக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் தாய்மார்கள் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். இந்த படம் காதலுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் படம் அல்ல.. ஆனால் நாடகக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். நாடகக் காதலுக்கு எதிரியான படம் இது. நாளைய தலைமுறை ‌ சிறப்பாக இருக்க இந்த படத்தின் மூலம் ஒரு விதைதான் நான் போட்டு இருக்கிறேன். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி. பெற்றோர்கள் இந்த படத்தை பார்க்க வாருங்கள். நான் நேர்மையாக இருக்கேன். நான் தான் படம் எடுத்தேன். மறைமுகமாக பலர் என்னை குத்த வர்றாங்க" என பேசியுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement