Lesson About Actress Tamannaah Bhatia: பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமன்னா.. கொதித்தெழுந்த பெற்றோர்கள்..!

பாடப் புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடம் இருப்பதை பார்த்த பிள்ளைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tamannaah (Photo Credit: @KollywoodStreet X)

ஜூன் 27, பெங்களூரு (Cinema News): தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா (Tamannaah Bhatia), 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். Y-AMT Automatic Gearbox: யமஹாவின் ஒய்-ஏஎம்டி கியர்பாக்ஸ்.. வெளியான டீசர்..!

கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பற்றி பெங்களூருவில் உள்ள சிந்தி என்கிற தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்று உள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவர, இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement