அக்டோபர் 22, தலைமை செயலகம் (Chennai News): வங்கக்கடல், தெற்கு அரபிக்கடல், அந்தமான் தீவுகள் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மழை (Tamilnadu Rains) தொடருகிறது. வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்தகட்ட நிலையை நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமாவட்ட பகுதிகளில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிகப்பு எச்சரிக்கை (Red Alert in Tamilnadu) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நேற்று முதலே மழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. நள்ளிரவில் பெய்த மழையால் ஒருசில மாவட்டங்களில் மழைநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்ட பேருந்து நிலையம் வழக்கம்போல நீர் நிரம்பி குளம் போல காட்சியளிக்கிறது. School Holiday: தொடரும் கனமழை.. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை (School Colleges Leave List Today in Tamilnadu):
இந்நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு.,
பள்ளிகள் விடுமுறை:
- நாமக்கல்,
- பெரம்பலூர்,
- சென்னை,
- புதுக்கோட்டை,
- சேலம்,
- புதுக்கோட்டை
- திருப்பூர்
- கரூர்
பள்ளி - கல்லூரிகள் விடுமுறை:
- திருச்சி,
- திருவாரூர்,
- மயிலாடுதுறை,
- சிவகங்கை,
- தஞ்சாவூர்,
- திருவள்ளூர்,
- கள்ளக்குறிச்சி,
- விழுப்புரம்,
- செங்கல்பட்டு,
- கடலூர்,
- ராணிப்பேட்டை,
- புதுச்சேரி & காரைக்கால்