Happy Birthday STR: சிம்பு பிறந்தநாள்: காதல் முதல் சர்ச்சைகள் வரை.. அனைத்தும் தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிலம்பரசனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

HBD STR (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 03, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்கள் பலரும் பெரிய ரசிகர் படையை வைத்திருக்கின்றனர். அவர்களின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் முதல் படத்திலிருந்து இன்று வரை படம் வெளியானாலும் ஆகாவிடினும், உண்மையான பெரும் ரசிகர் படையை வைத்திருக்கும் ஒரே நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு (Simbu Birthday) இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இயக்குநரும், நடிருமான டி.ராஜேந்திரனின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தே பலருக்கும் ஃபேவரேட்டாக (Silambarasan) மாறினார். அதன் பின் முதன்முதலில் கதாநாயகனாக நடித்து 2002 ல் வெளிவந்த ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்து கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் சிம்புவே ரசிகர்கள் குறித்து கூறுகையில், ‘முதல் படத்தில் அவ்வளவு பெரிய ஓபனிங்க் இருக்காது ஆனால் எனக்கு முதல் படம் வெளியாகையிலேயே பெரும் வரவேற்பு இருந்தது’ என உருக்கமாக கூறியிருந்தார். ASTHRAM Official Trailer: ஆக்சனில் அதிரடி காட்டும் ஷியாம்.. மிரட்டும் காட்சிகளுடன் வெளியானது அஸ்திரம் படத்தின் ட்ரைலர்.!

அடுத்தடுத்து வெற்றி:

பின் பல குத்து, கோவில், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், மன்மதன், சிலம்பாட்டம் என வெற்றிப்படங்களை குவித்தார். இவரின் ஆக்‌ஷன் படமாக வெளிவந்த காளை தோல்வியை தழுவியது. பின் 2010ல் வெளிவந்த கௌத்தம் மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம் தமிழ் திரையுலகில் இன்றளவும் முக்கியமான காதல் திரைப்படமாக இருக்கிறது. கௌதம் மேனன் செல்லும் இடங்களில் விடிவி பாகம் 2 குறித்த கேள்விகள் இடம் பெறாமல் இருந்ததே இல்லை அந்தளவு அப்படம் கொண்டாடப்பட்டது. பின் சிம்புவின் வானம், ஒஸ்தி, போடா போடி படங்களும் ரசிகர்களை கவர்ந்தது. மூன்று ஆண்டுகளுக்கு இடைவேளைக்கு பின் ‘வாலு’ படம் வெளியானது. இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என அடுத்தடுத்து படங்கள் தோல்வியையே தழுவியது. இருப்பினும் இவரின் ரசிகர்கள் இப்படங்களுக்கு வசூல் ரீதியாக ஆதரவை அளித்து வந்தனர்.

சர்ச்சை நாயகன்:

நிழல் உலகில் காதல் படங்களில் கொடிகட்டிப் பறந்தவருக்கு நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வியை தழுவினார். அப்போதும் அவருக்கு அவரின் ரசிகர்களே பக்க பலமாக இருந்தனர். சிம்பு (Simbu) பேசினாலே சர்ச்சை என்னும் அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் சிம்பு, பட பிடிப்பிற்கு தாமதமாக வருவது முதல் காதல் தோல்விகள், பட தோல்வி, பீப் சாங் என அனைத்திலும் சர்ச்சை எழுந்தது. இருந்தாலும் இவரின் ரசிகர்கள் குறைந்த பாடில்லை. மாறாக பலரும் இவருக்கு ஆதரவு அளித்தே வந்தனர்.

மீட்டெடுத்த ரசிகர்கள்:

உடல் எடை அதிகமாகி தன் தோற்றத்தை இழந்திருந்தார் சிம்பு. அவரது ரசிகர்கள் கம் பேக் கேட்டுகொண்டே இருந்ததால் தன் உடையை சுமார் 30 கிலோ குறைத்து அவரின் ரசிகர்களுக்காக மீண்டும் பழைய எடைக்கு திரும்பி வந்தார். பல இடங்களில் தன் ரசிகர்கள் குறிந்து கூறுகையில் கண்ணீர் விட்டு அழுதும் இருக்கிறார். உடல் எடை குறைத்த நடித்த ஈஸ்வரன் படமும் மண்ணை கவ்வ, ரசிகர்கள் இருக்கும் தைரியத்தில் மாநாடு படத்தில் நடித்து வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பாராத அளவு வெற்றியைக் கண்டார். Agricultural Film: தமிழ் சினிமாவில் பெருகும் விவசாயப் படங்கள்.. கண்டிப்பா இந்த லிஸ்ட் படங்களாம் பாருங்க.!

முதல் காதல்:

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை அரசியல் காரணங்களால் தொகுக்க முடியாத நிலையில், ரசிகர்கள் அனைவரும் சிம்பு ஹோஸ்டாக இருக்க வேண்டும் என கேட்டுகொண்டனர். சிம்புவும் ரசிகர்களுக்காக் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உலக நாயகனின் வேலையை இவரிடம் கொடுத்ததும் இணையத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதன் பின் வெந்து தனிந்தது காடு, பத்துத் தல திரைப்படமும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வெற்றியைக் கண்டது. பொன்னியின் செல்வன் 2 திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் தந்து எண்ட்ரீயில் அரங்கையே அதிர வைத்த நொடிகள் தமிழ் திரையுலகில் அவரின் ரீ எண்ட்ரீயை சொல்லும் விதத்தில் அமைந்தது. சிம்புவின் 48வது திரைப்படமும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்து வெளியாக இருக்கிறது.

எனது முதல் காதல் என்னுடைய ரசிகர்கள் தான் என சிம்பு கூறியிருக்கிறார். பல தடைகளையும், சர்ச்சைகளையும் தாண்டி சிம்புவிற்கு அவ்வளவு அன்புகளையும் அள்ளித் தருகின்றனர் அவரது தீவிர ரசிகர்கள்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now