Cannes Film Festival 2024: அமோகமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. பங்கேற்ற திரை பிரபலங்கள்..!

77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.

Cannes Film Festival 2024 (Photo Credit: @filmstofilms_ X)

மே 15, கேன்ஸ் (Cinema News): 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது (Cannes Film Festival) மே 15ந் தேதியில் இருந்து இம்மாதம் 25ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும், இவ்விழா நடைபெற்றுவருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடம்பரமான ஃபேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது. இவ்விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் தற்போது முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது. Narendra Modi Profile: "என்னது சொந்தமா கார் கூட இல்லையா.?" - பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு என்ன?.! விபரம் உள்ளே.!

இவ்விழாவுக்கு நடிகை, நடிகர்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் வருகின்றனர். 77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நேரப்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அதிதி ராவ் ஹைதாரி, சோபிதா துலிபாலா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement