PM Modi (Photo Credit: @anilkhatri005 X)

மே 15, வாரணாசி (Uttar Pradesh News): நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election 2024) வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), நேற்று தாக்கல் செய்த தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டிலும், 2019ஆம் ஆண்டிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டே வெற்றி பெற்றார். வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு மற்றும் கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

மோடியின் கல்வித்தகுதி: பிரதமர் நரேந்திர மோடி, 1967ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி முடித்ததாகவும், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்தாகவும், 1983ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்ததாகவும் தனது கல்வித் தகுதி குறித்து கூறி உள்ளார். Raging Bulls Video: கமுதி வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் திருவிழா.. சீறிப்பாய்ந்த காளைகள்..!

மோடியின் சொத்து மதிப்பு: பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் கையில் ரொக்கமாக 52,920 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், குஜராத் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கணக்கில் 73,304 ரூபாயும், வாரணாசி வங்கியில் 7,000 ரூபாயும், எஸ்பிஐ வங்கியில் தனது FD-இல் 2.85 கோடி ரூபாய் இருப்பதாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழ் 9,12,398 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் மொத்தம் 45 கிராமில் 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு 2.67 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் கிடையாது. காந்திநகரில் உள்ள நிலத்தில் தனது பங்கை தானமாக வழங்கியதால், மோடிக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிக்கப்பட்ட வருமானம் (ஐடிஆர்) ரூ.11.14 லட்சமாக இருந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டில் ரூ.23.56 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.