அக்டோபர் 30, சென்னை (Chennai News): இந்து மத சாஸ்திரங்களின்படி ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ச ஏகாதசி, வடமாநிலங்களில் 'தேவ் உதானி ஏகாதசி' (Gauna Devutthana Ekadashi) என்ற பெயரில் பெருவாரியாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவை வணங்கி விரதம் (Devutthana Ekadashi Vratam & Ritual Methods) இருந்து வழிபடுவது புண்ணியத்தை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பகவான் ஸ்ரீ மகா விஷ்ணு 4 மாதங்கள் யோக உறக்கத்தில் இருந்து எழுந்து மங்களமான செயலை தொடங்கும் நாளாக இது கவனிக்கப்படுகிறது. இந்த நாளில் விசேஷ பூஜைகளுடன் விஷ்ணுவை வழிபடுவது திருமண தடைகளை அக்கட்டம். 2025ம் ஆண்டுக்கான தேவ் உதானி ஏகாதசி பண்டிகை (Devutthana Ekadashi 2025) நவம்பர் 02, 2025ல் சிறப்பிக்கப்படுகிறது. Kanda Sashti Viratham: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: விரதத்தை தவற விட்டவர்கள் இந்த விரதம் இருந்தால் முழு பலனும் கிடைக்கும்!
தேவ் உதானி ஏகாதசி 2025 & விரதம், வழிபாடு முறைகள் (Gauna Devutthana Ekadashi Vratam Mantra & Ritual Methods):
இந்த நாளில் அதிகாலை எழுந்து, சூரிய உதயத்துக்கு முன் குளித்துவிட வேண்டும். வீடு, பூஜை அறைகளை சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணுவுக்கு மலர்கள், பழங்கள், துளசி இலைகள் படைத்து வழிபட வேண்டும். திருமண தடைகள் அகல விஷ்ணுவுக்கு சிறப்பு பூஜை செய்யலாம். மஞ்சள், குங்குமம் கொண்டு விஷ்ணுவை வழிபடலாம். சுமூகமான திருமண வாழ்க்கை, பிரச்சனைகளில் இருந்து விடுபட துளசி தேவியை வழிபடலாம். லட்சுமி, விஷ்ணு, துளசி தேவியை ஒன்றாக வழிபடுவது திருமண வாழ்க்கையை அருளி, மகிழ்ச்சி-அமைதி கிடைக்க உதவும். விஷ்ணுவை வணங்கும்போது 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். வீட்டில் விஷ்ணுவை நினைத்து தீபம் ஏற்றுவது மட்டுமல்லாது விஷ்ணு கோவில்களுக்கு சென்றும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். இந்த விரத இருப்பதால் விஷ்ணு மீதான பக்தி மேம்படும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும், ஆன்மீக ஞானம் கிடைக்கும். இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்து செய்திகளையும் உங்களுக்காக இணைக்கிறது.
1) இன்று தேவ் உதானி ஏகாதசி ! உங்கள் மனம் பக்தியால் நிரம்பி, வாழ்க்கை நலன்களால் மலரட்டும்!

2) தேவ் உதானி ஏகாதசி நாளில், விஷ்ணுவின் அருள் கிடைக்கட்டும்!

3) விஷ்ணு பகவானின் திவ்விய அருள் உன்னை அனைத்து துயரங்களிலிருந்தும் காத்தருளட்டும்! 🙏✨

4) உண்மையான பக்தி கொண்ட இதயத்தில் விஷ்ணு எப்போதும் வாழ்வார்.. உன் மனம் அதுபோலவே இருக்கட்டும்! இனிய தேவ் உதானி நல்வாழ்த்துக்கள்!

5) தேவ் உதானி ஏகாதசி நல்வாழ்த்துகள்!

தேவ் உதானி ஏகாதசியை சிறப்பிக்கும் அனைவருக்கும் விஷ்ணுவின் அருள் கிடைக்க லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.