Pa Ranjith & Gana Isaivani: ஐயப்ப விரதம் குறித்து சர்ச்சை பாடல்; கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு எதிராக புகார்.!
ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா? இது பழைய காலம் இல்லப்பா என்ற பாடல் தற்போது மீண்டும் வைரலாகி சர்ச்சையை சந்தித்துள்ளது.
நவம்பர் 23, மேட்டுப்பாளையம் (Coimbatore News): தமிழ் திரையுலகில் தலித் மக்களின் வலிகளை உணர்ந்தும் விதமான திரைப்படங்களை எடுத்து, முக்கிய இயக்குனராக வலம்வருபவர் பா ரஞ்சித் (Pa Ranjith). இவர் நீலம் பண்பாட்டு மையத்தை வழிநடத்தி வருகிறார். இவர்களின் சித்தாந்தங்கள் அதன் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படுகிறது. அவ்வப்போது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் இயக்குனரும் கலந்துகொள்வார்..
ஐ எம் சாரி ஐயப்பா (I am Sorry Ayyappa Song):
இதனிடையே, நீலம் பண்பாட்டு (Neelam Cultural Center) நிகழ்ச்சியில், பிக் பாஸ் போட்டியாளரும், கானா படகியுமான இசைவாணி (Gana Isaivani), "ஐ எம் சாரி ஐயப்பா" என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாடல் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்குடனமும் இருப்பதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார்:
இதனால் சமூக வலைத்தளங்களில் இசைவாணிக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கஸ்தூரி விவகாரத்தை இழுத்து இருவருக்கும் வெவ்வேறு நியாயமா? என கேள்விகளும் இழுபட்டு வந்தது. இதனிடையே, ஐயப்ப பக்தர்கள் குறித்து இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பாடல் பாடியதாக கானா இசைவவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோருக்கு எதிராக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் பாடல் வெளியான நிலையில், தற்போது ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை செல்லும் நிலையில், இவ்விசயம் சர்ச்சையை சந்தித்து இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பாடல்: