Death Threat to Urofi: சாமியார் போல வேடமிட்ட இந்தி கவர்ச்சி நடிகைக்கு, இந்துத்துவ ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்; அச்சத்தில் நடிகை.!

பாலின சமத்துவத்தை மக்களுக்கு போதிக்கிறேன் என, கவர்ச்சியான-வித்தியாசமான உடைகளில் உலாவரும் நடிகை உர்பி ஜாவேத், தற்போது காவி நிறத்தில் உடையணிந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Urofi Javed (Photo Credit: @Urofi_ X)

அக்டோபர் 31, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் பெரியளவிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சின்னத்திரை தொடர்கள் மற்றும் மிகக்குறைந்த திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகை உர்பி ஜாவேத் (Urofi Javed).

மக்களிடம் பாலின சமத்துவத்தை வளர்க்க உயிருள்ள வரை போராடுவேன் என தெரிவிக்கும் உர்பி, பொதுவெளிகளில் தோன்றும்போதும், தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடும்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பகிருவார்.

கவர்ச்சி என்பது மனித வாழ்க்கையில் இல்லாதது எனினும், உடல் அங்கங்களை பார்த்து கவர்ச்சியுறும் விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இவ்வாறான உடைகளை அணிவதாகவும் அவர் தனது கருத்தை முன்வைக்கிறார்.

இந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி, தனது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட பதிவுகளை இடுகையிட்டார். Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.! 

Actress Urofi (Photo Credit: @Urofi_ X)

அதாவது, நடிகை உர்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று, சர்வதேச அளவில் நடைபெற்று முடிந்த ஹாலோவன் கொண்டாட்டத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் வீடியோ வெளியிடுகிறேன் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில், அவர் காவி நிற இடுப்பளவு உடை அணிந்து, மேலே அடர்சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து, ஒருபக்க காதுக்கு மேல் முடியில் நறுமண வத்தியை வைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த விடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் வழக்கம்போல லைக்குகளை வாரிக்குவித்த நிலையில், ஒருசிலர் இந்த வீடியோ இந்து சமூகத்தவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. அதனால் விடியோவை நீக்குங்கள் என பதிவிட தொடங்கினர். ஹிந்தியில் அவதூறான வார்த்தைகளையும் கருத்து பதிவு பக்கத்தில் கொட்டித்தீர்த்தனர்.

நள்ளிரவில் அவரின் மின்னஞ்சலுக்கு சிலர் கொலை மிரட்டலும் விடுத்து இருந்ததால், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தான் ஏற்கனவே திரைப்படத்தில் வந்த கதாபாத்திரம் ஒன்றையும் சேர்த்து, அக்கதாபாத்திரம் போல சித்தரிக்கவே இப்படியான உடைகளை அணிந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உர்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளாரா? என்ற விபரம் தெரியவில்லை. ஆனால், இந்து சமயத்தவர் மற்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தோர், இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி வருகின்றனர்.

கொலை மிரட்டல் பதிவு:

உர்பி ஜாவத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோ:

 

 
 
 

View this post on Instagram

 
 
 

 

A post shared by Uorfi (@urf7i)