Pushpa 2 Stampede: புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரம்; தாய் உயிரிழந்த நிலையில் மகன் மூளைச்சாவு..!

புஷ்பா 2 படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே தாய் உயிரிழந்த நிலையில், மகன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pushpa 2 Stampede (Photo Credit: @11monikaSingh X)

டிசம்பர் 18, ஐதராபாத் (Cinema News): அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 (Pushpa 2) திரைப்படம் கடந்த டிசம்பர் 05ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு, படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 04ஆம் தேதி அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு சென்றார். அப்போது, அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிகளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி:

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி, ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. Bigg Boss Raanav: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் ராணவ்.. ஜெப்ரி அடித்தாரா? நடந்தது என்ன?!

நடிகர் அல்லு அர்ஜீன் மீது வழக்குப்பதிவு:

இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கு சிறுவனை கவனித்து வருவதாக அவர் கூறினார்.

சிறுவன் மூளைச்சாவு:

இந்நிலையில், கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு, இன்று மூளைச் சாவு (Brain Death) அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படம் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில், மகன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement