Bigg Boss Tamil Season 8: "அந்த வேலையை மட்டும் பாருங்க" அருணை கதற விடும் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 10ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 10, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Pushpa 2: ஆயிரம் கோடியை நெருங்கும் புஷ்பா 2 திரைப்படம்.. 4வது நாள் வசூல் நிலவரம் இதோ.!

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவில், வாங்க டுவிஸ்டர் குட்மார்னிங் என தீபக் நக்கலாக சொல்ல, வாங்க ஸ்கில்ட் ஒர்க்கர் என பதிலுக்கு நக்கலடித்தார் அருண் பிரசாத். லேபர்ஸுக்கு இது போதும்னு நாங்க முடிவு செய்துவிட்டோம் என தீபக் சொல்ல ஸ்கில்ட் ஒர்க்கர்ஸ் சேர்ந்து அதை குடிங்க என்றார் அருண். அதை கேட்டதும் உங்களுக்கு வேறு கன்டன்ட்டே கிடைக்கவில்லை போன்று, புடுச்சீங்களா அந்த வார்த்தையை என ஃபுல் சவுண்டில் கத்தினார் தீபக். ஒரு வீட்டில் இருக்கும்போது இரண்டு பேரையும் அப்படி பிரிக்கக் கூடாது என அருண் சொன்னதும், எந்த டீம் நீங்க என கேட்டார் தீபக். நான் வெஷல் வாஷிங் என அருண் சொன்னதும் அந்த வேலையை மட்டும் பாருங்க என நோஸ்கட் செய்தார் தீபக். நான் லேபர் கிடையாது என அருண் சொல்ல, செம பெயர் கொடுத்திருக்காங்க டுவிஸ்டார், நீங்க பண்றது எல்லாம் டுவிஸ்டுனு இப்ப தான் புரியுது என்றார் தீபக். தொடர்ந்து தனியாக போய் அருண் அழ ஆரம்பிக்கிறார்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: