Bigg Boss Tamil Season 8: "எங்களுடைய கேமிற்கு இவர் தடையாக இருப்பார்" முத்துகுமரனின் புகைப்படத்தை எரித்த அருண்.!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 31ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 31, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டு, தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் வீட்டிலிருந்து அன்ஷிதா, ஜெப்ரி வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Actress Chitra's Father Suicide: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா?!

டிக்கெட் டு பினாலே:

தற்போது வீட்டில்10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதில் இந்த வாரம் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா,ரயான், ஜாக்குலின் என 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே போட்டி நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அந்த ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகவுள்ளார். இதனிடையே இன்று வெளியான முதல் புரோமோவில், 'நான் இந்த கேம்மில் இருந்து வெளியேறாமல் இருக்க அருணை இந்த கேம்மைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்' என கேம்மில் அருணின் புகைப்படத்தை முத்துகுமரன் எரித்திருந்தார். தொடர்ந்து இரண்டாவது புரோமோவில் 'எங்களுடைய கேமிற்கு இவர் தடையாக இருப்பார்' என்று கூறி முத்துகுமரனின் புகைப்படத்தை அருண் எரிக்கிறார். இதில் முத்துகுமரன் மற்றும் ராணவ் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: