Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!

தெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car Accident in Telangana (Photo Credit: @NewsMeter_In X)

அக்டோபர் 16, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் (Medak) ஷிவம்பேட்டை அருகே உசிரிக்கபள்ளியில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (அக்டோபர் 16) 7 பேர் ஒரு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறு பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு, அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. Actor Sreenath Bhasi's Driving License Suspended: மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் (Road Accident), அதில் பயணித்த 2 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement