Female Airline Employee Arrested: மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 1 கிலோ தங்கம் கடத்தல்; விமான நிறுவன பெண் பணியாளர் கைது..!
மலக்குடலில் சுமார் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த விமான நிறுவன பெண் பணியாளர், கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மே 31, கண்ணூர் (Kerala News): மஸ்கட்டில் இருந்து கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் 1 கிலோ தங்கத்தை மலக்குடலில் (Rectum) மறைத்து வைத்து, கடத்தி வந்ததாக விமான நிறுவன பெண் பணியாளர் ஒருவர், நேற்று (மே 30) கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அறிவித்துள்ளது. கொச்சியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குறிப்பிட்ட அறிக்கையில், மே 28-ஆம் தேதி அன்று கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி காதுன் என்ற கேபின் குழு உறுப்பினரை, டிஆர்ஐ அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இந்நிகழ்வு, வங்கதேச எம்.பி.யின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக, மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. Badam Benefits: உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய பாதாமில் உள்ள நன்மைகள்..!
இதனையடுத்து, விசாரணைக்கு பிறகு அவர் அதிகார வரம்பு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், கண்ணூரில் உள்ள பெண்கள் சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். இதேபோல, ஜக்கியா வார்டக் என்பவர் தங்கம் கடத்தியதாக மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார். தனது ஜாக்கெட்டுகளில் 25 கிலோ தங்கக் கட்டிகளுடன் மும்பை விமான நிலையத்தில், அதிகாரிகள் அவரை தடுத்து பிடித்துள்ளனர்.
தற்போது, இந்தியாவில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தியதற்காக விமானக் குழு பெண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் இதற்கு முன்பு பல முறை தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், கடத்தல் கும்பலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த நபர்களின் தொடர்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.