Grocer Beat The Customer To Death: தனது கடையில் பொருட்களை வாங்காததால் மளிகை கடைக்காரர் ஆத்திரம்; வாடிக்கையாளரை அடித்துக் கொன்ற சம்பவம்..!

டெல்லியில் தனது கடையில் பொருட்களை வாங்காமல் வேறொரு கடையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளரை, மளிகை கடைக்காரர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 02, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர், அப்பகுதியில் மளிகை கடை (Grocery Store) நடத்தி வருகிறார். இவரது கடையில் விக்ரம் குமார் (வயது 30) என்பவர், தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடைக்காரருக்கும் விக்ரம் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது கடையில் மளிகை பொருட்கள் வாங்குவதை நிறுத்துவிட்டு, மற்றொரு கடையில் வாங்கி வந்துள்ளார். Two Youths Killed In Train Collision: ரயில் மோதி இரண்டு வாலிபர்கள் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

இதுதொடர்பாக, இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மளிகை கடைக்காரர் இரும்பு கம்பியை கொண்டு விக்ரமை பலமாக தாக்கியுள்ளார். மேலும், கத்திரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விக்ரமின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், மளிகை கடைக்காரர் மற்றும் அவரது மகன்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement