Death | Railway Track (Photo Credit: Pixabay)

ஜூலை 02, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டம், திருப்பூர் கல்லூரி சாலை சலவைப்பட்டறை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் (Train Collision) அடிபட்டு, 2 வாலிபர்கள் இறந்து கிடந்தனர். இதனைப் பார்த்த உள்ளூர் வாசிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். David Miller Retires From T20Is: "எதிரணியை தனது அசத்தல் பீல்டிங்கிலும், பினிசிங்கிலும் திணறடித்த கில்லர் மில்லர்க்கு எண்டு கார்டா.." இன்னும் இருக்குடா..!

இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28). அதே ஊரை சேர்ந்த சரவணபவா (வயது 27) என்பது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் காவிலிபாளையம் புதூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை டீக்கடைக்கு சென்றுவிட்டு, பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இவர்கள் இருவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.