Teenager Murder: ரூ.100 பணத்துக்காக 22 வயது இளைஞர் கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!
உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 09, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மகோபா (Mahoba) மாவட்டத்தில் உள்ள சதார் பகுதியில் பச்பஹாரா கிராமத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 07) மாலை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலேஷ் (வயது 22) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிராமத்தை சேர்ந்த சிலருடன் சூதாட்டம் (Gambling) விளையாடி வந்துள்ளார். Road Accident: அந்தரத்தில் பறந்த குதிரை.. தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த சோகம்.., பதறவைக்கும் காட்சிகள்..!
இதனையடுத்து, நேற்று முன்தினம் ரூ. 100 கேட்டு அந்த கும்பல் இவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிலேஷை குத்திக்கொலை (Murder) செய்தனர். இதுகுறித்து, நிலேஷின் சகோதரர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாகவும், கொலை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.