Tribal Man Dragged Along Road: நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

கேரளாவில் பழங்குடியின நபரை காரில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tribal Man Dragged Along Road (Photo Credit: @HateDetectors X)

டிசம்பர் 17, வயநாடு (Kerala News): கேரள மாநிலம், வயநாடு (Wayanad) மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 15) ஒரு அடையாளம் தெரியாத கும்பலால் ஒரு பழங்குடி நபர் (Tribal Man) கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது கட்டைவிரல் ஒரு கார் கதவில் சிக்கியதால், அவரது கை, இடுப்பு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் மானந்தவாடியில் உள்ள கூடல்கடவுவில் உள்ள ஒரு தடுப்பணை அருகே நடந்தது.

பழங்குடியின நபர் படுகாயம்:

இதன் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பகுதிக்குச் சென்ற இரண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையே சில தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், செம்மடு குடியிருப்பைச் சேர்ந்த மதன் (வயது 49) உட்பட உள்ளூர் மக்கள் பிரச்சனையில் தலையிட முயன்றனர். அப்போது, ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அவரை காரில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்தது. மேலும், அந்த பழங்குடியின நபரின் கட்டைவிரல் கார் கதவில் சிக்கிக் கொண்டது,

காவல்துறையினர் தீவிர விசாரணை:

பின்னர், அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து, படுகாயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மானந்தவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை இன்னும் அடையாளம் காணவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ: