Woman Sexually Harassed By Food Delivery Person: உணவு விநியோகம் செய்ய வந்த நபர், வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறல்..!

பெங்களூரில் உணவு விற்பனை செய்ய வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Online Order Delivery (Photo Credit: Pixabay)

மார்ச் 22, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் எச்.ஏ.எல்.  காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் வசித்து வந்துள்ளார். இவர், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தார். இந்நிலையில், உணவு விற்பனை பிரதிநிதி ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து உணவை கொடுத்துள்ளார். பின்னர், கழிவறைக்கு போக வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சரி பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். Bollywood Actress Went Shopping Together: திரிப்தி டிம்ரி – சாம் மெர்சன்ட் இருவருக்கும் இடையே காதலா..? – வீடியோ வைரல்..!

இதனைப் பயன்படுத்தி, அவர் வீட்டிற்குள் சென்ற பிறகு குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பெண் தண்ணீர் கொண்டு வருவதற்காக சமயலறைக்குள் சென்றபோது, அவரின் பின்புறமாக சென்று கைகளை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதனால் அந்த நபர் உடனடியாக தப்பி சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக, அவர் எச்.ஏ.எல். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கலபுரகி மாவட்டம் சிஞ்சோலியை சேர்ந்த ஆகாஷ் (வயது 27) என்ற நபர் குந்தனஹள்ளி காலனியில் தனியார் விடுதியில் வசித்து வந்துள்ளார். இவர்தான், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டிற்கு உணவு விற்பனை செய்ய வந்த நபர், பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.