Chettinad Mutton kuzhambu (Photo Credit : Youtube)

நவம்பர் 01, சென்னை (Chennai News): ஒவ்வொரு வார இறுதியிலும் அடுத்த வாரத்திற்கு தேவையான சத்துக்களை பெறுவதற்காக சத்துக்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளை மக்கள் உண்பர். அசைவ உணவை விரும்பும் வீடுகளில் மட்டனுக்கென தனி இடமே உண்டு. மட்டன் விலை உயர்வு என்றாலும் அதன் சத்துக்களுக்காக அரை கிலோ அளவிலாவது மக்கள் வாங்கி சாப்பிடுவர். வழக்கம்போல இல்லாமல் இன்று மட்டனை வைத்து சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி? என விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. Murungai Keerai Thokku: முருங்கைக்கீரை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

 

மட்டன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

சோம்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கிராம்பு - 3

பட்டை - 1

ஏலக்காய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

மசாலா பொடி அரைக்க தேவையானவை:

காய்ந்த மிளகாய் - 8

கொத்தமல்லி விதைகள் - 5 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பட்டை - 2

ஏலக்காய் - 5

அன்னாசி பூ - 1

அரைக்க தேவையானது:

துருவிய தேங்காய் - 1 கப்

சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து மசாலா பொடி செய்ய தேவையான பொருட்களை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் துருவிய தேங்காய், சோம்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து உப்பு, மஞ்சள் சேர்த்து கிளற வேண்டும்.
  • பின் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கியதும், மசாலா பொடி சேர்க்கவும்.
  • மசாலா சேர்த்து சிறிதளவு கொதி வந்ததும் மட்டனை சேர்த்து குக்கரில் மூடி வைத்து 8 விசில் வரும் வரை காத்திருந்தால் சுவையான மட்டன் குழம்பு தயார்.
  • மட்டனை இறக்கிய பின்னர் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து சிறிதளவு கொதிக்க விட சுவை கூடுதலாக இருக்கும்.