5 மதுபாட்டில்களை குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம்.. 21 வயது வாலிபர் பரிதாப பலி..!

கர்நாடகாவில் வாலிபர் ஒருவர், பந்தயம் கட்டி 5 மதுபாட்டில்களை தண்ணீர் கலக்காமல் குடித்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youth Dies After Drinking 5 Bottles of Alcohol (Photo Credit: @AkshayPratap94 X)

மே 02, கோலார் (Karnataka News): கர்நாடக மாநிலம், கோலார் (Kolar) மாவட்டத்தில் உள்ள புஜாரஹல்லா கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). இவர், தனது நண்பர் வெங்கட ரெட்டியிடம், 5 மதுபாட்டில்களை தண்ணீர் கலக்காமல் முழுமையாக குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். பின்னர் தண்ணீர் கலக்காமல் 5 மது பாட்டில்களையும் முழுமையாக குடித்துள்ளார். மதுபானத்தை குடித்து முடித்த சிறிது நேரத்திலேயே, கார்த்திக் மயங்கி கீழே விழுந்துள்ளார். 13 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை.. ஆசிரியை கைது..!

வாலிபர் பரிதாப பலி:

இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முல்பாகல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement