Asaduddin Owaisi: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; கேள்வி எழுப்பிய அசாதுதீன் ஒவைசி..!

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

AIMIM Chief Asaduddin Owaisi (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 24, ஐதராபாத் (Telangana News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். PM Modi on Pahalgam Attack: பயங்கரவாதத்தை வேரறுப்போம் - பிரதமர் மோடி சூளுரை.!

ஏஐஎம்ஐஎம் தலைவர் கண்டனம்:

இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் (AIMIM) தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்தில், ஒரு போலீஸ்காரரோ அல்லது CRPF முகாமோ கூட இல்லை. பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. மேலும், அவர்கள், சுற்றுல்லா வந்த அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தனர். பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளித்தது. அவர்கள் எப்படி எல்லையைத் தாண்டினர்? அதற்கு யார் பொறுப்பு? பஹல்காமை அடைந்தால், அவர்களும் ஸ்ரீநகரை அடைய முடியும். நீதி வெல்லும். பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement