Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!

சாலைகளில் பயணிக்கும்போது நாம் கவனமாக சென்றாலும், சில நேரங்களில் நமது வாழ்நாட்கள் முடியும் தருவாய் வரும்போது அனைத்தும் இறைவனின் செயலில் மட்டுமே அடங்கியுள்ளது.

Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!
Visuals from Video (Photo Credit: Twitter)

அக்டோபர் 19, குஜராத் (Trending Video): குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள அம்ரேலி - பப்ரா (Amreli-Babra Highway) நெடுஞ்சாலையில், நேற்று மாலை 04:30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர், 2 பேரை தனது வாகனத்தில் ஏற்றி பயணம் செய்தார்.

இவர் சாலையில் வானத்தை இயக்கி வரும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்து சாலையில் விழுந்தார். அவர் இயக்கி வந்த வாகனம் சாலையோரம் சென்று நின்றது. Maharashtra Shocker: சொத்துக்காக குடும்பத்துக்கே மெல்லக்கொல்லும் விஷம்; 5 பேரை காவு வாங்கிய அரக்கிகள்.. மஹாராஷ்டிராவில் அதிரவைக்கும் சம்பவம்.! 

அதில் இருந்த இருவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். ஆட்டோ ஓட்டுநர் சாலையில் கிடந்த நிலையில், அப்பகுதி மக்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சோதித்தபோது, ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் பதைபதைப்பு காட்சிகள், அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. Whitening Discharge: பெண்களை வாட்டிவதைக்கும் வெள்ளைப்படுதல்.. தவிர்ப்பது எப்படி?..! ஆலோசனைகள் இதோ.! 

விசாரணையில், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் ஓதாத்பாய் முந்த்வா (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள லுன்கி கிராமத்திற்கு செல்லும்போது விபத்து நடந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).