அக்டோபர் 19, சென்னை (Health Tips): பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும், தங்களின் வாழ்நாட்களில் வெள்ளைப்படுதல் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் வாழ்க்கையை நகர்த்தியதே இல்லை என்று கூறலாம். வெள்ளைப்படுதல் இயல்பான பிரச்சனை எனினும், சில தவிர்க்க முடியாத பிரச்சனையின் அறிகுறியாகவும் அவை இருக்கலாம். வெள்ளைப்படுதல் பாக்டீரியா தொற்று பிரச்சனை ஆகும். இவை பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

கோடைகாலங்களில் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பெண்ணின் பிறப்புறுப்பு செல் சுவரில் நிறமில்லாத, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவமானது இயற்கையாகவே சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்துள்ள திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகளில் இருந்து பிறப்புறுப்பை பாதுகாக்கும்.

ஈஸ்ட், பாக்டீரியா போன்ற தொற்றுநோய் கிருமிகள் பிறப்புறுப்பை பாதிக்கும் சமயத்தில், பிறப்புறுப்பு பகுதியில் சுருக்கம் அமிலத்தன்மை என்பது காரத்தன்மையாக மாறும். நிறமில்லாத நிலையில் வெளியாகும் திரவம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் வெளியேறும்.

இவ்வாறான வெள்ளைப்படுத்தலுக்கு முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில், இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனை வரலாம். இனப்பெருக்க உறுப்பு, சிறுநீர்ப்பாதை நெருக்கமாக இருக்கும் என்பதால், பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனை சிறுநீர்பாதைக்கும் வேகமாக பரவும்.

இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள பெண்கள், விரைந்து செயல்பட்டு மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. பிறப்புறுப்பில் தொற்றுகள் இல்லாத பெண்களுக்கு கூட வெள்ளைப்படுதல் சில நேரங்களில் ஏற்படும். இவை சில நாட்களில் சரியாகும். Allu Arjun Warmly Welcomed by Fans: தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு.. களைகட்டும் கொண்டாட்டம்.! 

பாதிப்பை ஏற்படுத்தாத வெள்ளைப்படுதல் பருவமடையும் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய்க்கு பின்பு, கர்ப்பமான சயமங்களில் ஏற்படலாம். வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு காரணமாக, பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள் குறித்தும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதன் அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், பிறப்புறுப்பில் ஒவ்வாமை மற்றும் அப்பகுதி சிவந்து காணப்படுதல், பிறப்புறுப்பில் புண், கொப்பளங்கள், உடலுறவு சமயத்தில் பிறப்புறுப்பு பகுதியில் வழக்கத்தை விட கடுமையான மற்றும் தீவிரமான வலி போன்றவை ஆகும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனையை தடுக்க பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும். மாதவிடாய் நாட்களிலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பு சுகாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உள்ளாடைகளை தேர்வு செய்யும்போது பருத்தியினால் ஆன உடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நைலான் உடைகள் கூடவே கூடாது.

மலேரியா, மஞ்சள் காமாலை, காசநோய் இருப்பினும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் நபர்கள் முறையான ஆலோசனை பெறாமல் உபயோகம் செய்தலும், அவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். நீண்ட நாள் கருத்தடை சிகிச்சையும், மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையும் வெள்ளைப்படுதலை ஏற்படுத்தலாம்.