அக்டோபர் 18, கட்சிரோலி (Maharashtra Crime News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி பகுதியில் உறவினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையில் பகீர் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அஹீரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் பிரு கும்பாரே. இவர் உட்பட குடும்பத்தினர் 5 பேர் அடுத்தடுத்து மர்மமான வகையில் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி சங்கர் மற்றும் அவரின் மனைவி விஜயா கும்பாரே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக நாக்பூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். UN Food Fund to Afghanistan: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான்., மக்களுக்கு 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிஉதவி; ஐ.நா உணவு திட்ட கூட்டத்தில் அறிவிப்பு.!
மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி செப். 26 மற்றும் செப். 27ம் தேதி கணவன் - மனைவி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதற்குப்பின், சங்கரின் மகள் கோமல் டஹாகோக்கர் (Komal Dahagaokar), அவரின் மகன் ரோஷன் (Roshan Kumbhare), மகள் வர்ஷா என்ற ஆனந்தா (Ananda @ Varsha Urade) ஆகியோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்.08, அக்.14, அக்.15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சங்கரின் கடைசி மகன், ஷங்கரின் கும்பாரேவின் கார் ஓட்டுநர் சங்கர், விஜயா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகின்றனர்.
அடுத்தடுத்த மர்ம மரணங்கள் காரணமாக விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், சங்கமித்ரா கும்பாரே மற்றும் ரோசா ராம்டேகே (Sanghamitra Kumbhare & Rosa Ramteke) ஆகியோரின் செயல்பாடுகளை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
இறுதியில் இவர்கள் இருவரும் சொத்து தகராறு விஷயத்தில் குடும்பத்தை கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் இருவரில் ரோசா ஷங்கர் கும்பாரேவின் மருமகள் ஆவார். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
#Maharashtra | Two daughter -in-law together killed 5 family members in 20 days in #Gadchiroli
Both of them very carefully mixed poison in everyone's food and drinks.#CrimeNews #crime pic.twitter.com/7qytjjwwqK
— Mumbai Tez News (@mumbaitez) October 19, 2023