டிசம்பர் 18, சூரத் (Gujrat News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படும் என பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 2020ல் ராமர் கோவில் கட்டும் பணிகள் விறுவிறுப்புடன் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!
கட்டுமானப்பணிகள் & திறப்புத்தேதி: 70 ஏக்கர் நிலப்பரப்பில், 2.7 ஏக்கர் அளவில் கோவில் கட்டும் பணிகள் ரூ.1800 கோடி பொருள் செலவில் நடந்து வருகின்றன. 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவிலை திறக்க விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ராமர் கோவிலை கட்டுவதற்கு இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்து அமைப்பினர் நிதிகளை குவித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக நடைபெறும் கும்பாவிஷேக விழாவுவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. Monkey Wait to Put Henna: எவ்வுளவு பொறுமையா உட்கார்ந்து இருக்கார் பாருங்க.. அமைதியாக காத்திருந்து மெகந்தி வைக்கும் குரங்கு.!
ராமரின் உருவம் கொண்ட செயின்கள்: இந்நிலையில், ராமர் கோவிலில் சிலை நிறுவும் பணிகளை முன்னிட்டு, ஸ்ரீ ராமர் மற்றும் கோவில் மாதிரி கொண்ட ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அங்குள்ள பகுதிகளில் விழாக்காலங்களில் கடைகளில் பிரதானமாக விற்பனைக்கு வைக்கப்படவையுள்ளன. விரைவில் மிகப்பெரிய ஆன்மீகத்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் அயோத்தி மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்நகரின் மக்கள் தங்களின் வருமானத்தை நினைத்து மகிழ்ச்சி அடைய தொடங்கியுள்ளனர். 91 Delivery in 2 Days: வெள்ளத்தின் பிடியில் சிக்காமல் இருக்க கர்ப்பிணிகளை அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்: 2 நாட்களில் 91 பிரசவம்.!
2 ஆயிரம் வைரங்கள் கொண்டு தயாரிப்பு: முன்னதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி மற்றும் தொழிலதிபர், 2 ஆயிரம் வைரங்கள் மற்றும் வெள்ளியை கொண்டு ஸ்ரீ ராமர் கோவிலின் வடிவத்தை ஒத்த ஆபரணத்தை தயாரித்து இருக்கிறார். இதனை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Ayodhya: Shri Ram and Ram Temple model key rings become the centre of attraction ahead of the grand consecration of the Ram Janmabhoomi Temple. pic.twitter.com/phxw7XsPFV
— ANI (@ANI) December 22, 2023