Slim Weightless Mobile: அடேங்கப்பா.. ஸ்மார்ட்போனில் எடை குறைந்த போன்கள் இவ்வுளவு உள்ளதா?.. வச்சிருக்குறதே தெரியாதுங்க.! லிஸ்ட் இதோ.!
நாம் பார்த்து வியந்த பல ஸ்மார்ட்போன்களில் எடை குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.
டிசம்பர், 10: இன்றுள்ள தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன்களின் (SmartPhone) ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. ஒவ்வொருவரும் எதோ ஒரு தொழில்நுட்பத்தினை சார்ந்து வாழ தொடங்கிவிட்டோம். இதில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாதது. நாம் பார்த்து வியந்த பல ஸ்மார்ட்போன்களில் எடை குறைவான (Slim Weightless Mobile) சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.
விவோ வி23 ப்ரோ 5G (Vivo V23 Pro 5G): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 108MP + 8MP + 2MP மூன்று லென்ஸ் கொண்ட பிரைமரி கேமரா, 50MP + 8MP செல்பி கேமரா, 6.56 இன்ச் (1080 x 2376) பிக்சல் டிஸ்பிளே, Li-Po 4300 mAh பேட்டரி திறனுடன் ரூ.38,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 7.35 mm அளவுடன் 170 கிராம் மட்டுமே அதன் எடை ஆகும்.
விவோ வி23 5G (Vivo V23 5G): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 64MP + 8MP + 2MP மூன்று லென்ஸ் பிரைமரி கேமரா, 50MP + 8MP செல்பி கேமரா, 6.44 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே Li-Po 4200 mAh பேட்டரி திறனுடன் ரூ.29,990 க்கு விற்பனை செய்யதுப்புகிறது. 7.55 mm அளவுடன் 180 கிராம் எடையுடன், 44 W விரைந்து சார்ஜ் ஏற்றும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக விவோ வி23 உள்ளது. Aadhar Pan Link: பேன் கார்டுடன் ஆதாரை இணைப்பது இவ்வுளவு சுலபமா??… 5 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வேலையை முடியுங்கள்.!
சேம்சங் கேலக்சி எஸ்21 5G (Samsung Galaxy S21 5G): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB ரேம், 64MP + 12MP + 12MP மூன்று பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா 6.2 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே Li-Ion 4000 mAh பேட்டரி திறனுடன் ரூ.69,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ ரெனோ7 ப்ரோ 5G (OPPO Reno7 Pro 5G): 256GB ஸ்டோரேஜ், 12GB ரேம், 50MP + 8MP+ 2MP மூன்று பிரைமரி கேமரா, 32MP செல்பி கேமரா, 6.55 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4500 mAh பேட்டரி திறனுடன் ரூ.34,999 க்கு ஒப்போ ரெனோ7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை சிஐயப்படுகிறது. 7.8 mm அளவுடன் 173 கிராம் எடை கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது.
சேம்சங் கேலக்சி எம்53 5G (Samsung Galaxy M53 5G): 128GB ஸ்டோரேஜ், 6GB, 8GB ரேம், 108MP + 8MP+ 2MP + 2MP பிரைமரி கேமரா, 32MP செல்பி கேமரா, 6.7 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 5000 mAh பேட்டரி திறனுடன் ரூ.26,499 க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சேம்சங் கேலக்சி எம்52 ஸ்மார்ட்போன் 7.4 mm அளவுடன் 176 கிராம் எடை கொண்டது ஆகும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30): 128GB ஸ்டோரேஜ், 6GB, 8GB ரேம், 50MP + 50MP + 2MP மூன்று லென்ஸ் கேமரா, 32MP செல்பி கேமரா, 6.5 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4020 mAh பேட்டரி திறனுடன் ரூ.27,999 க்கு சந்தை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. 6.79 mm அளவுடன் உலகளவில் புகழ்பெற்ற எடைகுறைந்த ஸ்மார்போன்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், மோட்டோரோலா ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தினை பெற்றுள்ளது.