Patna Shocker: 8, 10 வயது சிறுமிகள் சாலையோரம் மீட்பு; ஒருவர் பலி., மற்றொருவர் உயிர் ஊசல்.. பாலியல் பலாத்காரம் & கொலை?.!

பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து இருக்கிறது. இதில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பான சம்பவம் அதிர்வலைகளை தருகின்றன.

Rape & Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா, ஹிந்துணி கிராமம், புல்வாரிஷரிப் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் சிறுமியின் சடலங்கள் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது, 8 வயதுடைய சிறுமி உயிரிழந்து சடலமாக கிடந்தார். 12 வயதுடைய சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Engineer Dies by Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே பறிபோன உயிர்: கிரிக்கெட் போட்டியில் நடந்த சோகம்.! 

இந்த விஷயம் குறித்து தகவல் தெரிவித்த புல்வாரிஷரிப் காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சிஹாக், "சிறுமிகளின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிகிச்சை பெற்றுவரும் சிறுமி கண்விழித்தால் மட்டுமே அடுத்தகட்டமாக விசாரணை நடைபெறும் என தெரிவித்தார். நிகழ்விடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என கூறினார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement