Heart Attack Death (Photo Credit: @news24tvchannel X)

ஜனவரி 10, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்த்தவர் விகாஷ் நேகி (வயது 34). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள அதிவிரைவு சாலை பகுதியில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, 14வது ஓவரில் அவர் ரன் சேகரிக்க முயற்சித்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள், துரிதமாக செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதில் எந்த பயனும் இல்லை.

மைதானத்திலேயே நொடியில் ஏற்பட்ட மரணம்: இதனையடுத்து, விரைந்து ஆகாஷ் நேகி மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆகாஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆகாஷ் விளையாட்டு மைதானத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த பதைபதைப்பு காட்சிகள் கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகி இருக்கின்றன. 34 வயதாகும் ஆகாஷ் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Mohammed Shami Receives Arjuna Award: மாபெரும் கவுரவம்.. முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது..! 

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: கடந்த 2020ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் மாரடைப்பு சார்ந்த மரணங்கள் பலருக்கும் அதிர்ச்சிதரும் வகையில் ஏற்படுகிறது. நடனமாடும்போது, விளையாடும்போது, பள்ளிக்கு செல்லும்போது என ஒருகாலத்தில் வயது முதிர்ந்தோருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்சனை, இன்றளவில் சிறு குழந்தைகள் வரை வயது வித்தியாசமின்றி ஏற்பட்டு வருகிறது. மக்களின் உணவு பழக்ககம், மாறிவரும் சுகாதாரத்தை சூழ்நிலைகள், காலநிலை மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணிகளால் உடல் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.