Coimbatore College Girl Rape Case (Photo Credit : Youtube / Pixabay)

நவம்பர் 03, கோயம்புத்தூர் (Coimbatore News Today): கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி (Coimbatore College Student), நேற்று (நவ.02) இரவு தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இரவு சுமார் 11 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் (Coimbatore Airport News) பின்புறம் உள்ள பகுதியில் காரில் இருந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஜோடி தனியாக இருப்பதை அறிந்த கும்பல் அரிவாள் மற்றும் கற்கள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை நெருங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து காருக்குள் இருந்த மாணவியிடம் அத்துமீறவும் முயற்சித்துள்ளனர். இதனால் இளைஞர்களை தடுத்து காரை வேகமாக ஓட்டிச் செல்ல ஆண் நண்பர் முயற்சித்த நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் கார் கண்ணாடியை உடைத்து காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். Coimbatore: நள்ளிரவில் கல்லூரி மாணவியை தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. கோவையில் அதிர்ச்சி.!

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை (College Girl Student Gang Abused in Coimbatore):

இதனை சற்றும் எதிர்பாராத இருவரும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முற்பட்டாலும் கற்களால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆண் நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கார் நின்றபின் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ஆண் நண்பரை வெட்டிய இளைஞர்கள், பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி தனிமையான பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் பெண்ணை நிர்வாணப்படுத்தி தனியார் கல்லூரிக்கு பின்புறம் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்ட இளைஞர் காயத்துடன் பரிதவித்த நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நிர்வாண நிலையில் பெண்ணை மீட்ட போலீசார்?

பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். மேலும் பெண்ணை தேடிய பொது அவர் கல்லூரிக்கு பின்புறம் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். கோவையில் நடந்த இந்த சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.