JP Nadda Wife SUV Stolen: பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா மனைவியின் பெயரில் உள்ள கார் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை..!

சர்விஸ் சென்டரில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசியல் புள்ளியின் கார் ஒன்று திருடுபோன சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

JP Nadda (Photo Credit: @Indian_Analyzer X)

மார்ச் 25, புதுடெல்லி (New Delhi): பாஜக தேசிய தலைவராக பணியாற்றி வரும் ஜேபி நட்டா, தெற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருக்கிறார். இவரின் மனைவி மல்லிகா நட்டா. இவருக்கென டொயாட்டோ பார்ச்சுனர் கார் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மல்லிகா நட்டாவின் பெயரில் (Mallika Nadda SUV Stolen) உள்ள காரை, ஓட்டுநர் ஜோகிந்தர் கோவிந்தபுரியில் இருக்கும் டொயோட்டா பார்ச்சுனர் சர்விஸ் சென்டருக்கு எடுத்துச்சென்று விட்டுள்ளார். பழுதை சரி செய்து வாகனத்தை வாங்கிக்கொள்வதாக வீட்டிற்கு திரும்பியவர், மீண்டும் சர்விஸ் சென்டருக்கு சென்றபோது கார் மாயமானது தெரியவந்தது. Fire on Temple: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; ஆராதனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 13 பேர் படுகாயம்.!

கடந்த வாரம் நடந்த சம்பவம் தெரியவந்தது: உடனடியாக இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் 19ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், தற்போது வரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. அதிகாரிகள் சிசிடிவி கேமிராவை ஆய்வுசெய்தபோது, கார் குருகிராம் நோக்கி பயணித்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். தற்போது வரை காரின் இருப்பிடம் என்பது தெரியவில்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement