அக்டோபர் 08, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தில் கல்யாண்பூர் காவல்நிலையப் பகுதியில் உள்ள படௌரி கிராமத்திற்கு அருகே கார் கட்டுப்பாட்டை (Car Accident) இழந்து குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி..!
4 பேர் பலி:
முதற்கட்ட விசாரணையில், திருமணத்தில் கலந்துகொண்டு பிரயாக்ராஜிலிருந்து கான்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 5 மணியளவில், டயர் பஞ்சர் காரணமாக கார் குளத்தில் விழுந்தது. உடனே, உள்ளூர்வாசிகள் உதவியுடன், உடல்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்கள் சாஹில் குப்தா, சிவம் சாஹு, ரித்தேஷ் சோங்கர் மற்றும் ராகுல் கேசர்வானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
UP के फतेहपुर जिले से एक दिल दहला देने वाली खबर सामने आई है। कल्याणपुर थाना क्षेत्र के बडौरी गांव के पास पंचर होने से एक स्कॉर्पियो कार अनियंत्रित होकर तालाब में जा गिरी। हादसे में चार युवकों की मौके पर ही मौत हो गई, जबकि पांच अन्य गंभीर रूप से घायल हैं। सभी युवक प्रयागराज से… pic.twitter.com/UZJgl1k8zZ
— TRUE STORY (@TrueStoryUP) October 8, 2025