Nainar Nagendran Ariyalur Visit | TVK Vijay (Photo Credit: @NainarBJP / @TVKVijayHq X)

அக்டோபர் 26, அரியலூர் (Ariyalur News): தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவேன் என்ற ஆசையுடன் அரசியலில் களமிறங்கிய தவெக தலைவர் விஜய்க்கு, கரூரில் நடந்த துயரமான சம்பவம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தவெகவின் அரசியல் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கி இருக்கின்றன. விஜய் விரைவில் கரூர் செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரூர் துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கரூர் செல்ல தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டு, உரிய கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி முறையீடும் செய்யப்பட்டுள்ளது. தவறான ஊசியால் நீல நிறத்தில் மாறி அழுகிய பச்சிளம் குழந்தையின் கை.. பெற்றோர்களே உஷார்.! 

நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு:

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கி, மாவட்ட வாரியாக மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். அரியலூரில் நேற்று பிரச்சாரம் செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கரூர் மாவட்டத்துக்கு விஜய் செல்லக்கூடாது என திட்டத்துடன் திமுக அரசு செயல்படுகிறது. கரூர் சென்றால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைக்கூட விஜயை பார்க்க அனுமதிக்காதது தவறான செயல். சாமானியர் கூட கரூர் சென்று வரமுடியாத நிலையில் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன" என பேசினார். கரூர் சம்பவத்துக்குப்பின்னர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பை மத்திய-மாநில அரசு வழங்கியுள்ள நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நயினார் நாகேந்திரன் உரை (Nainar Nagendran Speech Ariyalur):

அரியலூர் மக்களின் மனக்குமுறல் என பாஜக வெளியிட்டுள்ள வீடியோ: