Balloon Stuck In Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே உஷார்..!
கர்நாடகாவில் பலூன் தொண்டையில் சிக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 03, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் (Uttara Kannada) ஜலியால் தாலுகா, ஜோகனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண பெல்காம்வகர். இவரது மகன் நவீன் நாராயணன் (வயது 13), அங்குள்ள அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் (டிசம்பர் 01) இரவு நேரத்தில் வீட்டில் இருந்துள்ளார். Road Accident: இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
அப்போது, பலூனை (Balloon) ஊதி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். எதிர்பாராதவிதமாக பலூன் திடீரென வெடித்து சிதறிய நிலையில், அது சிறுவனின் சுவாச பாதையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர், சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டிருந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மூச்சுச்திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.