Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!
அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
டிசம்பர் 30, சௌகார்பேட்டை: தங்கம் வாங்க சென்னை வந்த நகைக்கடை பிரதிநிதிகளிடம் வருமான வரித்துறை (Robbery Name Of ED Officers Later Gang arrested by Chennai Police) அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சிக்கியுள்ளது. அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூரை (Guntur, Andra Pradesh) சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42). இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணியாற்றி வரும் அலிகான் (வயது 25), சுபானி (வயது 26) ஆகியோர் கடந்த 16ம் தேதி குண்டூரில் இருந்து ரூ.67 இலட்சம் பணத்துடன் சென்னையில் உள்ள சௌகார்பேட்டையில் ஆர்டர் செய்த நகை வாங்க வந்துள்ளனர்.
இருவரும் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் கொடுங்கையூர் - மீனம்பாக்கம் சாலையில் வந்துகொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் இவர்களை இடைமறித்த கும்பல் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து, அலிகானிடம் இருந்த ரூ.67 இலட்சம் பணத்தை பறித்து சென்றுள்ளது.
நடந்தது வழிப்பறி சம்பவம் என்பதை சில நிமிடங்களில் புரிந்துகொண்ட அலிகான், கொடுங்கையூர் காவல் (Kodungaiyur Police) துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரனின் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. Marion Biotech Stopped: உஸ்பெகிஸ்தானில் 18 பேரை காவு வாங்கிய சிரப் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு..!
ஹைதராபத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் வேங்கட நரசிம்மராவ் (வயது 31) கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்டு ரூ.7 இலட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதற்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிற முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேரடியாக நேற்று சரணடடைந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11,50,000 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடந்த விசாரணையில் ஆந்திராவில் உள்ள குண்டூரை சேர்ந்த அப்துல் பாஜி (வயது 33), அஞ்சு பாபு (வயது 41), ஷேய்க் ஸுபாணி (வயது 32), நிமி மகேஷ் (வயது ௨௮௦ என்பது உறுதியானது. இவர்களிடம் இருந்து விசாரணைக்கு பின் மொத்தமாக ரூ.31,90,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் ஈஸ்வரன் பேசுகையில், "குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்த கொள்ளை திட்டமிட்டு நடந்துள்ளது. பல மாதங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சித்து பல தோல்விகள் நடந்து இறுதியாக கொள்ளை அடித்துள்ளனர்.
இந்த கொள்ளை கும்பலானது பணத்தை வைத்து ரூ.1 இலட்சம் நிதியை திருப்பதி கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, கோவாவுக்கு சென்று அழகிகளோடு உல்லாசமாக இருந்து சூதாட்டம் விளையாடி இருக்கிறது" என்று தெரிவித்தார்.