Five Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Five Terrorists Shot Dead (Photo Credit: @RBegum786 X)

டிசம்பர் 19, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் (Kulgam) மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர். இதற்கு முன்னதாக நேற்றிரவு தீவிரவாதிகள் (Terrorists) நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த தகவலை ஒட்டி பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 தீவிரவாதிகள் சுட்டுக் (Shot Dead) கொல்லப்பட்டுள்ளனர். Woman Nose Cut Off: நிலத்தகராறில் மூக்கை வெட்டிய நபர்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு ஓடிய பெண்..!

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:

இதுதொடர்பாக சினார் கார்ப்ஸ் படைப்பிரிவு (Chinar Corps Regiment) சார்பில் தெரிவிக்கையில், 'டிசம்பர் 19ஆம் தேதியன்று இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் சேர்ந்து குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif