Road Accident: அந்தரத்தில் பறந்த குதிரை.. தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த சோகம்.., பதறவைக்கும் காட்சிகள்..!

உத்தர பிரதேசத்தில் சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Horse killed in car crash (Photo Credit: @SachinGuptaUP X)

டிசம்பர் 09, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) கார் மோதிய விபத்தில் குதிரை (Horse) சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கார் மோதியதில் சுமார் 7 அடி உயரத்தில் குதிரை பறந்து கீழே விழுந்தது. இதில் குதிரை சம்பவ இடத்திலேயே இறந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். Bomb Threats to Schools: 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை தீவிர சோதனை.!

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: