Mobile Theft: உங்களின் செல்போன் திருடுபோய்விட்டதா?.. IMEI நம்பர் கொண்டு பிளாக் செய்வது எப்படி?..!

ஏனெனில் நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், நம்மை அறியாமல் நடக்கும் செயல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது.

Respective: Hacker & Man Using Mobile

டிசம்பர், 11: நமது வாழ்வின் அங்கமாக மாறிப்போன செல்போன் (Mobiles Theft), சில நேரங்களில் திருடுபோவதும் / தவறிப்போவதும் இயல்பே. ஏனெனில் நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், நம்மை அறியாமல் நடக்கும் செயல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. நமது உள்ளங்கையில் உலகம் வந்ததும் அவற்றில் நாம் நமது பல தகவல்களை சேமித்து வருகிறோம்.

வங்கிக்கணக்கு விபரங்கள், தனிப்பட்ட தரவுகள், போட்டோக்கள் (Privacy Data) போன்றவற்றை திருட்டில் ஈடுபடும் நபர்கள் மோசமான செயல்களுக்கு உபயோகம் செய்யவும் வாய்ப்புள்ளது. செல்போன் திருட்டுகளை பொறுத்தமட்டில் மொபைல் திரும்பி கிடைப்பது எளிதான காரியம் இல்லை என்பதால், அதன் IMEI நம்பர் வழியே செல்போனை யாரும் உபயோகம் செய்யாமல் தடுத்துவிடலாம்.

நாம் புதிதாக வாங்கும் செல்போனில் சர்வதேச மொபைல் அடையாள எண் (International Mobile Equipment Identity) என்று IMEI 15 நம்பர் கொண்ட இலக்கமாக இருக்கும். ஒவ்வொரு செல்போனுக்கு தனித்தனி அடையாள சான்று இருக்கும். நமது செல்போன் பாக்ஸ் அல்லது அமைப்புகளில் IEMI நம்பர் இருக்கும். அதனை நாம் எழுதி வீட்டில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. IMEI வைத்து நமது செல்போனை பிளாக் செய்வது எப்படி என இனி காணலாம். ChampionsofCricket: உலகளவில் எப்போதும் மறக்க இயலாத தலைசிறந்த 50 கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. தோனி, சச்சின், விராட்க்கு எந்த இடம் தெரியுமா?..! 

Android Mobile

CEIR இணையதளத்திற்கு சென்று நமது மொபைலின் பிராண்ட், மாடல், நாம் தவறவிட்ட இடம், விலை, IMEI நம்பர் போன்ற விபரங்களை பட்டியலிட்டு நிரப்ப வேண்டும். மாற்று எண்ணுக்கு OTP அனுப்பி, அதில் கேட்கப்படும் விபரங்களை நிரப்பி பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த செயல்முறைகளுக்கு பின்னர் கோரிக்கை ஐடி நம்பர் வழங்கப்படும். அந்த என்னைக்கொண்டு நாம் திருடப்பட்ட மொபைல் கிடைத்ததும் மீண்டும் அன்லாக் செய்து கொள்ளலாம். நாம் CEIR வழிமுறையை செய்ததும் நெட்ஒர்க் ஆப்ரேட்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செல்போன் நம்பரை பிளாக் செய்யவும் ஆலோசிக்கப்படும்.

CEIR செயல்முறை டெல்லி, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே அம்மாநில அரசால் பொதுமக்கள் வரை பயன்படுத்த அனுமதி உள்ளது. அந்தந்த மாநிலங்களின் நிலையை பொறுத்து அவை மாறும். ஆதலால், உங்களின் செல்போன் தொலைந்துவிட்டால் IMEI நம்பர் கொண்டு விரைந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திடுவது சாலச்சிறந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:23 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif